2/28/2008

மெய்யான பொய்


உனை வெறுக்கும் சமயங்களில்.........
செல்லால் காண்பதும் பொய் செல்லால் கேட்பதும் பொய்

கற்றலின் hearing நன்று


உனைப் பார்த்து தெரிந்து கொண்டதை விட
உனைக் கேட்டு தெரிந்து கொண்டதே அதிகம்.

Inbox மனம்

Inbox மனத்தில் உன் சங்கதிகள் நிறைந்து வழிந்து

என் பதில்கள் Sent items ஆக உனை நோக்கி ஓடியது

2/24/2008

ஒடியும் நொடிகள்


பதிழுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும்
என் மனம் ஒடியும்

(Vo)ice mail

செவிகளில் ஒளித்துக்கொண்டே இருக்கிறது

என் மனதில் இருந்து voice mail ஆக நீ போட்ட மொக்கைகள்

அப்புறம்.....

இறைக்க இறைக்க தான் ஊரும் கிணறு.

"அப்புறம்", "அப்புறம்" போட்டே

ஊறியது நமது மனக் கிணறு

கடன் காரன்


எல்லாம் பேசி முடித்த பின்னும்
கடங்காரனாய் தான் தூங்க போகிறேன்
ஒவ்வொரு இரவும்.

செல்லறித்துப் போனேன் நான்


உன்னால் பேச முடியாமல் போன தருணங்களில்.....
"செல்"லறித்துப் போனது எனது ஸெல்ஸ்

பின்னிரவு பேசுகையில்........
அதிசய விளக்கை தேய்ப்பது போல்
என் மொபைல் தேய்த்ததும்
நீ என் முன் வரமாட்டாயா?

குறுந்தகவல் சேவை.......

உன் Empty screen reply கூட படிப்பதற்கு அழகாய் இருக்கிறது......
உன் மௌனத்தைப் படிப்பது போல!

Message to my gal

1
message
received

உன் empty screen reply கூட படிப்பதற்கு அழகாய் இருக்கும்

உன் மௌனத்தைப் படிப்பது போல்