4/02/2010

தலைப்பு மட்டும்




உன்னை பற்றி நினைக்கும் போதெல்லாம்
பற்றி எரிகிறது என் காதல் சூரியனைப் போல்


கொஞ்சம் மழை பெய்தாலும் ஒதுங்குபவர்கள்
எவ்வளவு வெயில் அடித்தாலும் ஒதுங்குவதில்லை

நீ என்னை வார்த்தைகளால் எவ்வளவு சுட்டாலும்
நான் உன்னை விட்டு ஒதுங்குவதாய் இல்லை

.

கோடைக்கால விடுமுறையைக் கேட்ட பிள்ளைகளைப் போல்
உன் பெயரைக் கேட்டதும் எனக்குள் சந்தோசம்.

உன் பெயரை மட்டும் சொல்லி விட்டு 
வேறெதுவும் சொல்லாமல் சென்று விட்டாய்...
கவிதையின் தலைப்பு கிடைத்து விட்டது
அதன் கீழ் எழுத உன்னைப் பற்றி கொஞ்சம் சொல்