என் பதின் பருவத்தில் நான் மிக விரும்பி ரசித்த ஒரு சாதனம் இது.
அட்டை பெட்டிக்குள்ள, பானைக்குள்ள எல்லாம் ஸ்பீக்கர் வச்சு பாஸ் ட்ரபளை வித விதமான காம்பினேஸன்ல வச்சு இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், தேவா எல்லோரும் எங்க வீட்டுக்குள்ள
வந்து ஆர்க்கெஸ்ட்ரா போட்ட காலம். இப்போ கம்ப்யூடர்லயும்,போன்லயும், எம்பி3 ப்ளேயர்லயும் எவளோ தான் மனசுக்கு பிடிச்ச பாட்ட "லிஸ்ட்" போட்டு கேட்டாலும் அப்போ இந்த செட்-ல கேட்ட சந்தோசம்
இப்போ இல்லவே இல்லை.
எங்க சித்தப்பா தான் எனக்கு இந்த விசயத்துல ரோல் மாடல். சம்பாதிக்கற காசுல முக்கால் வாசி கேஸட் வாங்கியே அழிச்சாரு. கேஸட் அடுக்கி வைக்கவே ஒரு ரேக் செஞ்சு வைச்சுருந்தார்.
இப்போ ஒரு புது படத்தோட பாட்டு ரிலீஸ் ஆகுதுனா அடுத்த நாளே நெட்-ல டவுன்லோட் பண்ணிடுவேன். ஆனா அப்போ எங்க சித்தப்பா வாரா வாரம் சம்பளம் வாங்கின உடனே நேரா கேஸ்ட் கடைக்கு போய் நாலஞ்சு புது கேஸட் வாங்கிட்டு வந்துடுவார்.
கிட்டதட்ட மூனு நாலு சாக்கு பை அளவுக்கு கேஸட் இருந்துச்சு. நண்பர்கள் உறவினர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா கை மாறி இப்போ சில கேஸட்ஸ் தான் இருக்கு.
இந்த முறை ஊருக்கு போனப்போ, பரண்ல கிடந்த இந்த செட்-ட எடுத்து தூசி தட்டி சர்வீஸ் பண்ணி எடுத்துட்டு வந்துருக்கேன். மெக்கானிஸம் மாத்தி கேஸட்,FM,Pen drive போடற மாதிரி கொஞ்சம் மாத்தியும் வச்சாச்சு.
எனக்குள்ள ஒரு சந்தேகம் இருந்துச்சு டிஜிட்டல் பாட்டுக்கும் மேக்னடிக் டேப் பாட்டுக்கும் என்ன வித்யாசம் இருக்கும்னு. மேக்னடிக் டேப்ல இருந்து வர பாட்டு இசையில இருக்க ஒரு உயிரோட்டம் இந்த டிஜிட்டல் பாட்டுல இல்லை.
ஒரு வேளை அந்த கால ஆளுங்க இப்டிதான் கிராம் போன் டிஸ்க்ல இருக்க உயிரோட்டம் இந்த மேக்னடிக் டேப்ல இல்லைனு சொல்லியிருப்பாங்களோ?
